News Just In

3/02/2021 08:22:00 PM

கிழக்கு மாகாண பூப்பந்தாட்டச் சுற்றுப்போட்டி சித்திரை மாதம் 2, 3, 4 திகதிகளில் ஆரம்பம்!!


லண்டன் லேடன் புடவையகம் பிரதான அனுசரணையுடன் பெருமையுடன் நடாத்துவதற்கு உத்தேசிக்கப்பட்டு சகல ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருந்த நிலையில் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இச்சுற்றுப்போட்டி இடைநிறுத்தப்பட்டிருந்தது. தற்போது நாட்டின் நிலைமை படிப்படியாக வழமைக்குத் திரும்பி வரும் நிலையில் இச்சுற்றுப்போட்டியானது சித்திரை மாதம் 2ஆம் 3ஆம் மற்றும் 4ஆம் திகதிகளில் மென்மேலும் சிறப்பாக நடாத்த உத்தேசித்துள்ளதுடன் எமது கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல வீரர்கள் ஏற்கனவே உத்தேசிக்கப்பட்ட சுற்றுப்போட்டிக்காக விண்ணப்பித்துள்ளதுடன் மேலும் விண்ணப்பிக்கத்தவறிய வீரர்களுக்காக போட்டிக்கான நுழைவுக்கான விண்ணப்ப முடிவுத்திகதி அதிகளவான பூப்பந்தாட்ட வீரர்கள் இச்சுற்றுப்போட்டியில் கலந்து கொண்டு இச்சுற்றுப் போட்டியை சிறப்பிப்பார்கள் எனவும் எதிர்பாக்கப்படுகின்றோம்.

எனவே, இப்போட்டியில் விண்ணப்பித்த வீரர்களைத் தவிர மேலதிகமாக கலந்துகொள்ள விரும்பும் வீரர்கள் தங்களது விண்ணப்பங்களை கீழ் குறிப்பிடப்பட்டிருக்கும் வயதெல்லைப்பிரிவுகளை கருத்தில்கொண்டு எதிர்வரும் 10.03.2021ம் திகதிக்கு முன்னர் எமக்கு நேரிலோ மின்னஞ்சல் மூலமாகவோ கிடைக்கக் கூடியவாறு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

போட்டிகள் பின்வரும் வயதெல்லைப் பிரிவுகளில் நடைபெறும்.

 13 வயதிற்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் - 200/=

 15 வயதிற்குட்பட்ட பெண்கள் ஒற்றையர் - 250/=

 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் ஒற்றையர் - 300/=

 திறந்த ஆண்கள் ஒற்றையர் - 500/=

 திறந்த பெண்கள் ஒற்றையர் - 500/=

 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் ஒற்றையர் - 500/=

 13 வயதிற்குட்பட்ட ஆண்கள் இரட்டையர் - 400/=

 15 வயதிற்குட்பட்ட பெண்கள் இரட்டையர் - 500/=

 17 வயதிற்குட்பட்ட ஆண்கள் இரட்டையர் - 600/=

 திறந்த ஆண்கள் இரட்டையர் - 1000/=

 திறந்த பெண்கள் இரட்டையர் - 1000/=

 40 வயதிற்கு மேற்பட்ட ஆண்கள் இரட்டையர் - 1000/=

குறித்த சுற்று போட்டிகளில் இறுதிச்சுற்றில் முதலாம், இரண்டாம் இடங்களை பெறும் வீரர்களுக்கு வெற்றிக் கேடயங்களும் பெறுமதியான பரிசில்களும் வழங்கப்படும் என்பதுடன் குறித்த சுற்று போட்டிக்கான முழுமையான ஊடக அனுசரணையினை VTN News இணையத்தள ஊடக சேவையானது வழங்குகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

நாட்டில் நிலவும் தற்போதய அசாதாரண சூழ்நிலை காரணமாக போட்டிகள் குறித்த திகதியில் நடாத்த முடியாமல் போனால் சுற்றுப்போட்டி பிற்போடப்பட்டு போட்டிக்கான திகதிகள் ஒவ்வொரு வீரர்களுக்கும் அறிவிக்கப்படும்.

நுழைவு விண்ணப்பங்கள் இத்துடன் இணைக்கப்பட்டுள்ள படிவத்துடன் நுழைவுக் கட்டணம் அடங்கலாக எதிர்வரும் 10.03.2021ம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்கப்படவேண்டும். (எக்காரணம் கொண்டும் இத்திகதிக்கு பின்னரான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது)

சுற்றுப்போட்டிக்கான விண்ணப்பங்கள் ஏற்கனவே கோரப்பட்டு பெறப்பட்ட காரணத்தினால் வயதெல்லைகள் சுற்றுப்போட்டி உத்தேசிக்கப்பட்ட இறுதி நாளான 01.11.2020 ஆந்திகதியை அடிப்படையாகக் கொண்டே கணிக்கப்படும்.

மேலதிக தொடர்புகள் விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் யாவற்றிற்கும்:-
கே.சற்குணசீலன்.
சத்தியா குரூப் (ஆரையம்பதி பிரதேச செயலகத்திற்கு முன்னால்)
பிரதான வீதி, ஆரையம்பதி-2.

தொ.பே.இல. 075 2283280, 077 1737283, மின்னஞ்சல் முகவரி:-  seelank1983@gmail.com.

No comments: