News Just In

3/02/2021 07:45:00 PM

மட்டக்களப்பு- ஏறாவூர் நகர சபைப் பிரதேசத்தைச் சுத்தமாக்கும் 10 நாள் சிரமதான வேலைத் திட்டம் ஆரம்பம்!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
ஏறாவூர் நகரை அழகுபடுத்தல் 10 சிரமதான வேலைத்திட்டம் அந்நகர சபைத் தலைவரால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இம்மாதம் 10 ஆம் திகதி வரை இந்த ஒருங்கிணைந்த சிரமதான தூய்மையாக்கல் பணி இடம்பெறவுள்ளதாக நகர சபைத் தலைவர் எம்.எஸ். நழீம் தெரிவித்தார்.

நகரை அழகுபடுத்தி பசுமையான நகராக மாற்றும் இந்த வேலைத் திட்டம் வட்டார அடிப்படையில் மேற்கொள்ளப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

ஊர் தழுவிய இந்த சிரமதான வேலைத்திட்டம் சமூகநல அமைப்புக்களின் பங்குபற்றுதலுடன் ஏறாவூர் நகரசபையினதும் ஏறாவூரi; பற்று பிரதேச சபையின் வாகனாதி ஒத்தாசையுடனும் இடம்பெற்று வருவதாக நகர சபைச் செயலாளர் எம்.ஆர் சியாஹ{ல்ஹக் தெரிவித்தார்.

மேலும் நகர சபைத் தலைவர் நழீம் தனது 3 இற்கு மேற்பட்ட சொந்த வாகனங்களையும் இந்த சிரமதானப் பணிக்காக இலவச சேவை வழங்கியிருப்பதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

இந்த வேலைத் திட்டத்திற்கு பொதுமக்கள் வர்த்தகர்கள் ஏனைய திணைக்கள கூட்டுத்தாபன அலுவலர்களினதும் ஒத்துழைப்பு நாடப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.












No comments: