News Just In

2/06/2021 10:17:00 AM

நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் கொரோனா மரணங்கள்..!!


நாட்டில் நேற்றைய தினம் மேலும் 4 கொவிட் மரணங்கள் பதிவானமயை அடுத்து மரணித்தோரின் எண்ணிக்கை 343 ஆக அதிகரித்துள்ளது.

சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் உறுதிபடுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு 3 பகுதியை சேர்ந்த 75 வயதான ஆண் ஒருவர் கடந்த 2 ஆம் திகதி தமது வீட்டில் வைத்து மரணித்தார்.

கொவிட் நியூமோனியா மற்றும் உயர் குருதியழுத்தம் காரணமாக அவர் மரணித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

அத்துடன் நாவல பகுதியை சேர்ந்த 89 வயதான ஆண் கொவிட்-19 ஒருவர் தொற்றுறுதியான நிலையில் கடந்த 4 ஆம் திகதி மரணமடைந்தார்.

கொழும்பு நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் தேசிய தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் மரணித்தார்.

கொவிட் நியூமோனியா, மோசமடைந்த சிறுநீரக நோயால் சிறுநீரகம் செயலிழந்தமை, குருதி நஞ்சாதல் மற்றும் குருதி விசமானதால் ஏற்பட்ட அதிர்ச்சி, நீண்ட காலமாக காணப்பட்ட இதய நோய் மற்றும் தீவிர நீரிழிவு நோய் காரணமாக அவர் மரணித்துள்ளார்.

பொகவந்தலாவை பகுதியை சேர்ந்த 72 வயதான ஆண் ஒருவர் கொவிட்-19 தொற்றுறுதியான நிலையில் நேற்று முன்தினம் மரணித்தார் .

டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் வைத்து தொற்றுறுதியான நிலையில் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் மரணித்ததாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கொவிட் நியூமோனியாவினால் இதயம் செயலிழந்தமையை அடுத்து அவர் மரணித்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மட்டக்குளி பகுதியை சேர்ந்த 63 வயதான பெண் ஒருவர் தொற்றுறுதியான நிலையில் கடந்த 4 ஆம் திகதி உயிரிழந்தார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இருந்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட பின்னர் அவர் மரணித்தார்.

கொவிட் நியூமோனியாவுடன் குருதி விசமானதால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் பல உடற்தொகுதி செயலிழந்தமை காரணமாக அவர் மரணிமடைந்ததாக சுகாதார பணிப்பாளர் நாயகத்தின் உறுதிபடுத்தலுடன் அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments: