News Just In

2/06/2021 11:35:00 AM

உண்மையில் சுதந்திரம் கிடைத்ததா? என கேள்வியுடன் google.lk இணையம் முடக்கம்- இலங்கை கணனி அவசர தயார் ஒருங்கிணைப்பு நிலையம்!!


சைபர் தாக்குதல் காரணமாக இலங்கையில் google.lk இணையதளம் இன்று (சனிக்கிழமை) காலை முடக்கப்பட்டுள்ளது என இலங்கை கணனி அவசர தயார் ஒருங்கிணைப்பு நிலையம் தெரிவித்துள்ளது.

உண்மையில் சுதந்திரம் கிடைத்ததா? என கேள்வியுடன் google.lk இணையம் முடக்கப்பட்டுள்ள நிலையில் சில .lk இணையதளங்கள் செயற்பாடுகள் தற்போது முழுமையாக முடக்கப்பட்டுள்ளது.

பெருந்தோட்டத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் அடிப்படை சம்பளம் தொடர்பான பிரச்சினைகள், ஊடகவியாளர்களுக்கான அச்சுறுத்தல்கள், தமிழ் அரசியல் கைதிகள் மற்றும் கொரோனா தொற்றினால் இறப்பவர்களை கட்டாயமாக தகனம் செய்வது தொடர்பான பிரச்சினைகள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு பொதுமன்னிப்பு வழங்கப்பட்டமை தமிழ் மொழியில் தேசிய கீதம் இசைப்பதற்கு தடை விதிக்கப்பட்டமை, இனவாத செயற்பாடுகள் மற்றும் இராணுவமயமாக்கல் குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: