News Just In

4/27/2025 08:46:00 AM

உயர்தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்!

உயர்தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்



கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் Doenets.LK உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2024 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, சிறந்த பெறுபேற்றை பெற்றவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

உயிரியல் பிரிவில் குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலய மாணவி ஹேகொட ஆராச்சிகே சந்திதி நிம்ஹார நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

கணிதப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலித்தை கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவன் லெந்து ரணசிங்க குமாரகே பெற்றுள்ளார்.

கொழும்பு விசாகா கல்லூாியின் மாணவி கங்கானிகே அமாஷா துலாரி பெரேரா, வணிகப் பிரிவில் நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அதேநேரம், ரத்னாவலி பாலிகா வித்யாலய மாணவி செனெலி சமத்கா ரணசிங்க, கலைப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்

No comments: