News Just In

4/30/2025 08:52:00 AM

என்ன ஆனார் பிள்ளையான் : மட்டக்களப்பை சுற்றிவளைத்து சமாளிக்கின்றாரா அநுர!

என்ன ஆனார் பிள்ளையான் : மட்டக்களப்பை சுற்றிவளைத்து சமாளிக்கின்றாரா அநுர


பிள்ளையான்  கைது செய்யப்பட்ட நாளிலிருந்து தற்போது வரை மட்டக்களப்பு (Batticaloa) பகுதியில் குற்றப் புலனாய்வு பிரிவினரின் ஊடுருவல் என்பது அதிகரித்த வண்ணமே உள்ளது.

கடந்த எட்டாம் திகதி மட்டக்களப்பில் உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து பிள்ளையான் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டார்.

2006 ஆண்டு டிசம்பர் 15 ஆம் திகதி பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்திருந்தனர்.

இதையடுத்து, பிள்ளையான் தரப்பில் வழக்கறிஞராக உதய கம்மன்பில களமிறங்கிய நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததன் அடுத்த கட்டமாக மட்டக்களப்பின் மீது குற்றப் புலனாய்வு பிரிவினரின் பார்வை திரும்பியது.

இதில் மட்டக்களப்பில் உலாவும் பிள்ளையானின் ஆதரவாளர்கள் மற்றும் நெருங்கிய சகாக்கள் குறிவைக்கப்பட்ட நிலையில், இதன்தொடர்ச்சியாக பிள்ளையானின் சாரதியாகச் செயற்பட்ட நபர் கைது செய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டார்.

இதனுடன் அல்லாது தற்போது கிழக்கு பல்கலைக்கழகத்தில் (Eastern University, Sri Lanka) குற்றப் புலனாய்வு பிரிவினரால் மூன்று நாட்கள் சோதனை நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தை காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்த நிலையில், பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் குறித்து அங்கு விசாரணை நடத்தப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

No comments: