வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை நாட்டிற்கு அழைத்துவந்து சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பில் ஆராய்வதற்காக நேற்றைய தினம் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க ஆகியோர் தலைமை தாங்கியிருந்தனர்.
தொற்று நோய் தடுப்பு பிரிவின் பிரதானிகள் உட்பட சுற்றுலாத்துறையுடன் தொடர்புடைய அதிகாரிகள் பலர் இந்த சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
இதன் அடிப்படையில் சுற்றுலாத் துறையை மேம்படுத்த தேவையான சுற்றுலா வழிகாட்டல்கள் மற்றும் அடிப்படை திட்டங்களை உருவாக்குவதற்காக கூட்டுக் குழுவொன்றை நியமிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: