News Just In

12/04/2020 03:05:00 PM

முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் இதுவரையான போட்டிகளின் அடிப்படையில் முதல் இடத்தினை தக்க வைத்த யாழ் ஸ்டாலியன்ஸ் அணியினர்...!!


முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரின் இதுவரையான போட்டிகளின் அடிப்படையில் JAFFNA STALLIONS அணி 8 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்துள்ளது.

அத்துடன், JAFFNA STALLIONS அணி இதுவரை விளையாடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்று உயர் நிகர ஓட்ட சராசரியையும் பெற்றுள்ளது.

மேலும், DAMBULLA VIIKING அணி 6 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்திலும், COLOMBO KINGS அணி 4 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலும், KANDY TUSKERS அணி 2 புள்ளிகளுடன் நான்காவது இடத்திலும் உள்ளன.

எனினும், இதுவரை எந்தவொரு போட்டியிலும் வெற்றி பெறாத நிலையில், GALLE GLADIATORS அணி, 5 ஆவது இடத்தில் உள்ளது.

இந்த நிலையில், முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரில் இதுவரையான போட்டிகளின் அடிப்படையில் Danushka Gunathilaka 206 ஓட்டங்களைப் பெற்று அதிக ஓட்டங்களைப் பெற்ற வீரரின் வரிசையில் முன்னணியில் உள்ளார்.

மேலும், Dasun Shanaka 197 ஓட்டங்களுடன் இரண்டாம் இடத்திலும், Kusal Mendis 188 ஓட்டங்களுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.

அத்துடன், முதலாவது லங்கா பிரீமியர் லீக் தொடரில் இதுவரையான போட்டிகளின் அடிப்படையில் Naveen-ul-Haq 8 விக்கெட்டுகளைக் கைப்பற்றி பந்துவீச்சு வரிசையில் முன்னணியில் உள்ளமை குறிப்பிடத்தக்கது

No comments: