News Just In

12/04/2020 03:09:00 PM

மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவினர் சிறைச்சாலைக்கு விஜயம்..!!


நீதி அமைச்சர் அலிசப்ரியினால் இந்த குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், குறித்த குழுவினர் மஹர சிறைச்சாலைக்கு நேற்றைய தினம் விஜயம் செய்திருந்தனர்.

இதன்போது, சிறைச்சாலை கைதிகளிடம் குறித்த குழுவினர் சாட்சியங்களைப் பதிவு செய்திருந்தனர்.

அத்துடன், சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் தண்டனைக் கைதிகள் ஆகியோரிடம் இன்றைய தினம் சாட்சியங்கள் பதிவு செய்யப்படவுள்ளதாக அந்த குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, மஹர சிறைச்சாலையில் அண்மையில் ஏற்பட்ட அமைதியின்மை தொடர்பில் ஆராய நியமிக்கப்பட்ட குழுவின் இடைக்கால அறிக்கை நீதி அமைச்சர் அலிசப்ரியிடம் எதிர்வரும் திங்கட்கிழமை சமர்ப்பிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: