இந்த சம்பவம் இன்று காலை 7.15க்கு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பில் இருந்து புனானை கொரோனா சிகிச்சை நிலையம் நோக்கி சென்ற பேருந்து ஒன்றும், காத்தான்குடியில் இருந்து பொலன்னறுவை நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த இரு பேருந்துகளின் சாரதிகளும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த பேருந்தில் பயணித்த 23 கொரோனா தொற்றாளர்களில் இருவருக்கு மாத்திரம் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், குறித்த கொரோனா தொற்றாளர்கள் அனைவரும் புனானை கொரோனா சிகிச்சை நிலையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெலிக்கந்த பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

No comments: