News Just In

12/01/2020 02:29:00 PM

கிழக்கு மாகாண பாடசாலைகள் அனைத்துக்கும் மூன்று நாட்களுக்கு விடுமுறை- கிழக்கு மாகாண ஆளுநர்!!


சீரற்ற வானிலை காரணமாக கிழக்கு மாகாணத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கு மூன்று நாட்கள் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி நாளை புதன்கிழமை முதல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை மூடப்படும் என கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அறிவித்துள்ளார்.

வங்காள விரிகுடா கடற்பிராந்தியத்தில் நிலவும் தாழமுக்கம் எதிர்வரும் நாட்களில் மேலும் வலுவடையக் கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதன் காரணமாக கிழக்கில் கடலுக்கு செல்வதை தவிர்க்குமாறு மீனவர்களுக்கு அறிவுறுத்தல் விடுக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

No comments: