News Just In

12/01/2020 01:17:00 PM

தமிழ் மக்கள் மீண்டும் கல்வி சார்ந்த சமூகமாக வளர்வதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் – அங்கஜன் இராமநாதன் கோரிக்கை...!!


யுத்தம் நிறைவுக்குவந்து 10 வருடங்களுக்கு மேல் ஆகின்றபோதும் வடக்கு கிழக்கு மாணவர்களின் கல்வி நிலை பின்தங்கிக் காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன்   தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெறும், கல்வி தொடர்பான குழுநிலை விவாதத்தில் பேசிய அவர், அபிவிருத்திகள் ஏராளம் நடந்திருந்தாலும் கல்வி நிலை தொடர்ந்தும் பின்தங்கி காணப்படுவதாக சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக அண்மையில் வெளியான பரீட்சை முடிவுகளின் அடிப்படையில் யாழ் மாவட்டம் 19 ஆவது இடத்திலும் கிளிநொச்சி 25 ஆவது இடத்திலும் தீவக வளையம் இறுதி இடத்தில இருப்பதையும் அவர் சுட்டிக்காட்டினார்.

யுத்தத்தினால் தமிழ் மக்கள் உயிர்கள் உடமைகளை இழந்திருந்த நிலையில் கல்வி செல்வமும் இல்லாது போய்க்கொண்டிருக்கும் சூழலில் கல்வியில் சிறந்தோதொரு சமூகமாக வடக்கு கிழக்கு மக்கள் மீண்டும் வளர்ச்சி பெற இந்த அரசாங்கம் வழிவகை செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார்.

No comments: