News Just In

12/01/2020 04:13:00 PM

மின்னலினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொடுப்பனவு வழங்கி வைப்பு!!


நூருல் ஹுதா உமர்
அம்பாறை மாவட்ட காரைதீவு பிரதேச செயலக பிரிவில் கடந்த மாதம் மின்னல் தாக்கத்தினால் வீட்டு உபகரணங்கள் பாதிப்புக்குள்ளாகியவர்களுக்கான முற்பண கொடுப்பனவாக தலா 10,000/- வீதம் வழங்கி வைக்கும் நிகழ்வு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க காரைதீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் காரைதீவு பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எஸ்.பார்த்திபன், பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எம். புண்ணியநாதன், பிரதேச செயலக அனர்த்த முகாமைத்துவ உத்தியோகத்தர் எம்.சாருன் ஆகியோர் கலந்து கொண்டு பாதிப்புக்குள்ளாகியவர்களுக்கான முற்பண கொடுப்பனவை வழங்கிவைத்தனர்.

இம் மின்னல் தாக்கத்தினால் காரைதீவு பிரதேசத்தில் ஐந்து வீடுகள் பாதிப்புக்குள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments: