News Just In

12/03/2020 11:46:00 AM

இதுவரை நாட்டில் 987 பேர் கைது: பிரதிப்பொலிஸ்மா அதிபர் கூறுவதென்ன..?


முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இது வரையில் 987 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதிப்பொலிஸ்மா அதிபர் அஜித்ரோஹண தெரிவித்தார்

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, முகக்கவசம் அணியாமை மற்றும் சமூக இடைவெளியை பேணாமை தொடர்பில் இன்று வியாழக்கிழமை காலை ஆறுமணியுடன் முடிவடைந்த 24 மணித்தியாலயத்தில் 35 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதற்கமைய கடந்த அக்டோபர் மாதம் 30 ஆம் திகதி முதல் இதுவரையில் 987 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை பேணுதல் தொடர்பில் தொடர்ந்தும் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர். அதனால் நாட்டில் எந்த பகுதிகளில் இருந்தாலும் இந்த விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டியது கட்டாயமாகும் என்றார்.

No comments: