News Just In

11/01/2020 11:51:00 AM

மட்டக்களப்பு- களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி திடீர் மரணம்!!


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி எஸ். கிருஷ்ணகுமார் ஞாயிற்றுக்கிழமை (01.11.2020) உயிரிழந்துள்ளார்.

அவரது கடமைப் பிரிவான களுவாஞ்சிகுடி பகுதியில், சனிக்கிழமை நள்ளிரவு 12.30 மணி வரைக்கும் கடமையில் ஈடுபட்டிருந்த அவர் இவ்வாறு தீடிரென உயிரிழந்துள்ளார் என உறவினர்கள் தெரிவித்தனர்.

கடமையை மேற்கொண்டு விட்டு பாண்டிருப்பில் அமைந்துள்ள அவரது வீட்டிற்குச் சென்றிருந்த நிலையில் அவர் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை திடீர் சுகயீனம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அதிகாலை 03 மணியளவில் உயிரிழந்துள்ளார். அவரது சடலம் தற்போது கல்முனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

60 வயதுடைய உயிரிழந்த வைத்திய அதிகாரிக்கு திடீர் சுகயீனம் மாரடைப்பாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்படுகிறது.

No comments: