News Just In

11/01/2020 12:22:00 PM

தேசிய கொடி மற்றும் பௌத்த கொடிகளை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்ய நடவடிக்கை!!


இலங்கையின் தேசிய கொடி மற்றும் பௌத்த கொடி ஆகியவற்றின் தேவையினை உள்நாட்டிலேயே உற்பத்தி செய்து பூர்த்தி செய்வதற்கு தயாராக உள்ளதாக பத்திக், கைத்தறி மற்றும் உள்நாட்டு சுதேச ஆடை உற்பத்தி இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேககர ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவிடம் உறுதியளித்துள்ளார்.

தேசிய கொடி மற்றும் பௌத்த கொடிகளை வெளி நாடுகளில் உற்பத்தி செய்து இறக்குமதி செய்வதற்காக வருடாந்தம் பெருந்தொகை அந்நியச் செலாவணி செலவிடப்படுகின்றது.

அடுத்த வருடம் முதல், தேவையான கொடிகளை உயர் தரத்துடன் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்வதற்கு பத்திக் மற்றும் கைத்தறித் துறையில் உள்ள உற்பத்தியாளர்கள் தயாராக உள்ளதாக அமைச்சர் தயாசிறி ஜயசேககர தெரிவித்துள்ளார்.

பத்திக் உற்பத்தியிலான தேசிய கொடியை நேற்று பிற்பகல் ஜனாதிபதியின் இல்லத்திற்கு சென்று ஜனாதிபதிக்கு கையளித்த போதே அமைச்சர் இதனைத் தெரிவித்துள்ளார்.


No comments: