News Just In

10/31/2020 12:12:00 PM

செயலிழந்துள்ள பி.சி.ஆர் இயந்திரத்தை திருத்துவதற்கான தொழில்நுட்ப வல்லுநர்கள் அடங்கிய சீன குழு இலங்கை வந்தது!!


பி.சி.ஆர் பரிசோதனை இயந்திரத்தை சரிசெய்ய சீன நிறுவனத்தைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு நேற்று வெள்ளிக்கிழமை இரவு இலங்கைக்கு வந்துள்ளதாக கொழும்பில் உள்ள சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

"இதுவரை செயலிழப்பிற்கான காரணம் தெளிவாக இல்லை. 7 நாட்களும் 24 மணித்தியாலமும் பல மாதங்களாக இயங்கிய பிற இயந்திரங்களும் சரிபார்க்கப்பட்டு பராமரிக்கப்படும்" என சீனத் தூதரகம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது.

பி.சி.ஆர் இயந்திரத்தின் செயலிழப்பு காரணமாக, கிட்டத்தட்ட 20,000 பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் தாமதமாகிவிட்டமை குறிப்பிடத்தக்கது.

No comments: