குறித்த நிகழ்வானது, மங்கள விளக்கேற்றளுடன் ஆரம்பமானது.
குறித்த நிகழ்வில் மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், கல்லடி சித்திவிநாயகர் ஆலயம் மற்றும் பேச்சியம்மன் ஆலய தலைவர் ச.சந்திரகுமார், ஆலய முகாமையாளர் ந.ஹரிதாஸ், செயலாளர், பொருளாளர், ஆலய பிரதம குரு, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலை வைத்தியர்கள், தாதியர்கள், பணியாளர்கள், குருதி வழங்குநர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த நிகழ்வானது, நாட்டில் கொரோனா தொற்று நிலவும் இக்காலத்தில் அரசாங்கத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள சுகாதார நடைமுறைகளை பின்பற்றி சிறப்பாக நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இதன் பொது 2005 நண்பர்கள் குழாமால் இரத்த தானம் வழங்குவதன் நன்மைகள் மற்றும் குருதி வழங்க கூடியவர்களிடம் காணப்படவேண்டிய சுகாதார நடைமுறைகள் பற்றிய விளக்கம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் உரையாற்றிய மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜ சரவணபவன் மட்டக்களப்பு வைத்தியசாலைகளில் நிலவிவரும் குருதி பற்றாக்குறை மற்றும் அதனை நிவர்த்தி செய்யும் முறைகள், குருதி வழங்குவதனால் ஏற்படும் நன்மைகள் மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தில் நிலவும் கொரோனா தொற்றில் இருந்து மக்கள் தங்களை தாங்கள் பாதுகாத்து கொள்ள வேண்டியதன் அவசியம் என்பன தொடர்பில் கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்.
அதனைத் தொடர்ந்து இரத்த தானம் வழங்கும் நிகழ்வு சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்து ஆரம்பமானது. குறித்த நிகழ்வானது காலை 8-30 மணி தொடக்கம் 3-30 மணி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது .


























No comments: