News Just In

10/31/2020 08:02:00 PM

தனிமைப்படுத்தப்பட்ட குடும்பங்களுக்கும் 10000 ரூபா பெருமதியான அத்தியாவசிய பொருட்களை பெற்று கொடுக்க திட்டம்!!


தனிமைப்படுத்தலில் உள்ள குடும்பங்களுக்கு 10 ஆயிரம் ரூபா பெருமதியான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோரின் ஆலோசனைக்கு அமைவாக நடவடிக்கை எடுக்கபட்டுள்ளது.

இதன்படி, இதன்படி, 5 ஆயிரம் ரூபா அளவில் இரண்டு கட்டங்களாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

சுமார் 14 நாட்களுக்குத் தேவையான உணவுப்பொருட்கள் அடங்கிய பொதியே இவ்வாறு வழங்கப்படவுள்ளது.

இந்த நடவடிக்கைகள், மாவட்ட செயலங்களின் ஊடாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையில் கொழும்பு மாவட்டத்தின், 13 பிரதேச சபைகளுக்கு உட்பட்ட பகுதிகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள 6 ஆயிரத்து 25 குடும்பங்களுக்கு இவ்வாறு உணவுப்பொருட்கள் அடங்கிய பொதி பெற்றுக் கொடுக்கப்படவுள்ளது.

இதன்படி, ஹோமாகம, தெஹிவலை, மொரட்டு மற்றும் கடுவலை ஆகிய பிரதேச சபைகளின் ஊடாக தற்போதைய நிலையில், இந்த திட்டம் ஆரம்பிக்க்பட்டுள்ளது.

இதேவேளை, கம்பஹா மாவட்டத்தின் 13 பிரதேச செயலகப் பிரிவுகளில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள ஆறாயிரத்து 807 குடும்பங்களுக்கு இந்தப் பொருட்கள் வழங்கிவைக்கப்படவுள்ளன.

அதேபோன்று, களுத்துறை மாவட்டத்தின் 14 பிரதேச செயலகப் பிரிவுகளில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள 2 ஆயிரத்து 245 குடும்பங்களுக்கும், கேகாலை மாவட்டத்தில் ஆயிரத்து 248 குடும்பங்களுக்கும் இவ்வாறு உணவுப்பொருட்கள் அடங்கிய பொதிகள் வழங்கப்படவுள்ளன.

No comments: