நேற்றைய தினம் 10 பேருக்கு பேருக்கு கொவிட்-19 தொற்றுறுதியானது.
இதற்கமைய, நாட்டில் கொவிட்-19 தொற்றுறதியானோரின் எண்ணிக்கை இரண்டாயிரத்து ஒன்றாக அதிகரித்துள்ளது.
நேற்று தொற்றுறுதியானவர்களில், 7 பேர் அமெரிக்காவில் இருந்து நாடுதிரும்பியவர்கள் எனபதுடன், ஏனைய மூன்று பேர், இயக்கச்சி தனிமைப்படுத்தல் மையத்தில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த கடற்படை சிப்பாய்களாவர் என அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதேநேரம், கொவிட்-19 தொற்றுறுதியான மேலும் 14 பேர் நேற்று குணமடைந்துள்ளனர்.
இதற்கமைய, நாட்டில் இதுவரை குணமடைந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்து 562 ஆக அதிகரித்துள்ளது.
இந்த நிலையில், 428 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
No comments: