News Just In

6/24/2020 08:47:00 PM

மட்டக்களப்பு -திருமலை பிரதான வீதியில் அம்பியுலன்ஸ் வண்டியில் மோதி இளைஞர் பலி


அம்பியுலன்ஸ் வண்டியொன்றும் மோட்டார் சைக்கிளொன்றும் நேருக்கு நேர் மோதியதில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இவ்விபத்து இன்று (24) பிற்பகல் திருகோணமலை - மட்டக்களப்பு பிரதான வீதி இருதயபுரம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் தோப்பூர், அல்லைநகர் பகுதியைச் சேர்ந்த ஜவாஹிர் மொஹமட் அஹ்ஸான் எனும் 25 வயது நபர் எனவும் தெரியவருகின்றது.

கிளிவெட்டி பிரதேச வைத்தியசாலை அம்பியுலன்ஸ் வண்டி நோயாளர்களை திருகோணமலை பொது வைத்தியசாலைக்கு கொண்டு சென்று மீண்டும் வைத்தியசாலைக்கு செல்கின்றபோது தோப்பூர் பிரதேசத்திலிருந்து மோட்டார் சைக்கிளில் வருகை தந்து கொண்டிருந்த இளைஞர் அம்பியுலன்ஸ் வண்டியுடன் மோதி படுகாயமடைந்த நிலையில் மூதூர் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

உயிரிழந்தவரின் சடலம் தற்போது மூதூர் தள வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன் விபத்துடன் தொடர்புடைய அம்பியுலன்ஸ் சாரதியை கைது செய்துள்ளதாகவும் விபத்து தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் மூதூர் பொலிஸார் தெரிவித்தனர்.



No comments: