News Just In

6/25/2020 09:24:00 AM

செம்மண்ணோடை வீதிகளுக்கு மின்குமிழ் பொருத்தும் பணி


எஸ்.எம்.எம்.முர்ஷித்.
வாழைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட செம்மண்ணோடை பகுதியில் பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூரின் முயற்சியினால் இருளுடன் காணப்பட்ட வீதிகளுக்கு மின்குமிழ் பொருத்தும் பணிகள் இன்று இடம்பெற்றது.

வாழைச்சேனை பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூரிடம் பொலீசார், கொண்டயன்கேணி பள்ளிவாயல் நிருவாகம் மற்றும் பிரதேச மக்கள் விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் வாழைச்சேனை பிரதேச சபை தவிசாளரின் உதவியுடன் மின்குமிழ் பொருத்தப்பட்டதாக பிரதேச சபை உறுப்பினர் ஏ.எல்.ஏ.கபூர் தெரிவித்தார்.

இம் வீதி மின்குமிழ்கள் பொருத்தப்பட்டதால் இப்பகுதியில் இடம்பெற்ற திருட்டு மற்றும் சட்ட விரோத செயல்களை தடுக்க முடியும் என்று பொது மக்கள் தெரிவித்தனர்.


No comments: