
மட்டக்களப்பு, கல்லடி ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலய அறநெறிப் பாடசாலை பரிசளிப்பு நிகழ்வு இன்று(01.03.2020) ஸ்ரீ சித்தி விநாயகர் பாடசாலை மண்டபத்தில் அறநெறிப் பாடசாலை அதிபர் சோ.சிவலிங்கம் தலைமையில் நடைபெற்றது.
நிகழ்வின் பிரதம அதிதியாக மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் வ.வாசுதேவன் அவர்கள் கலந்துகொண்டிருந்ததுடன், வைத்தியர் கேதீஸ்வரன், அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றார்கள் கலந்துகொண்டனர்.
மாணவர்களின் நடனம், பேச்சு, கதாப்பிரசங்கம், நாடகம், வில்லுப்பாட்டு போன்றன நிகழ்வை அலங்கரித்தன, போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டன.




































No comments: