News Just In

3/01/2020 04:57:00 PM

போக்குவரத்து கடமைகளில் கடற்படையினரும் ஈடுபடவுள்ளனர்!


கொழும்பு நகரின் நகராட்சி எல்லைக்குள் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த இலங்கை கடற்படை பொலிஸாரை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாகனங்களை கையாளுவதற்காக படையினர் இனைக்கப்பட்டதுக்கு இணையாக கொழும்பு நகரத்தில் வேகமாக அதிகரித்து வரும் வாகன நெருக்கடிகளை குறைப்பதற்கு மற்றும் இலங்கை பொலிஸாருக்கு உதவும் நோக்கத்துடன் 2020 பிபரவரி 25 ஆம் திகதி முதல் கடற்படை பொலிஸார் முகத்துவார பொலிஸாருடன் இனைந்து கடமைகளில் ஈடுபட தீர்மானம் எடுத்துள்ளது.

இந்த முன்முயற்சியின் மூலம் கொழும்பு நகராட்சி எல்லைக்குள் போக்குவரத்து கட்டுப்பாட்டு கடமைகளை திறமையாக நிறைவேற்றப்படுகின்றதுடன் காற்று மாசுபாட்டைக் குறைக்கும் அதே வேளையில் மனித நேரங்களை வீணாக்குவதை குறைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

No comments: