News Just In

3/01/2020 01:40:00 PM

மட்டக்களப்பில் தேவாலய ஆராதனையின்போது உள்ளே நுழைந்த நான்கு முஸ்லிம்கள் கைது!!

மட்டக்களப்பு கல்லடி பாலத்துக்கு அண்மையிலுள்ள புனித செபஸ்ரியான் தேவாலயத்தில் ஆராதனை இடம்பெற்றுக்கொண்டிருந்த வேளையில் உள் நுழைந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 02 பெண்கள் உட்பட முஸ்லிம் நபர்கள் நால்வரை பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை (01) இடம்பெற்றுள்ளது.

ஞாயிற்றுக்கிழமை காலை ஆராதனை இடம்பெற்றுக் கொண்டிருந்த நிலையில் குறித்த நபர்கள் உள்ளே நுழைந்ததனால் ஆராதனையில் ஈடுபட்டிருந்த மக்கள் பீதியடைந்ததுடன், அவர்களைப் பிடித்து பொலிஸாரிடம் ஒப்படைத்திருந்தனர்.

இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் இறக்காமம் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பதுடன் குறித்த நபர்களில் ஒருவரின் மகளுக்கு ஏற்பட்ட நோயைக் குணப்படுத்த இவர்கள் சீயோன் தேவாலயத்துக்கு வந்ததாகவும் சீயோன் தேவாலயம் பூட்டப்பட்டிருந்த நிலையில்

ஆராதனை வேறு இடத்தில் இடம்பெறுவதாக அறிந்த இவர்கள் புனித செபஸ்ரியான் தேவாலயத்திற்கு வந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரிய வந்துள்ளது. மட்டு தலைமையக பொலிஸார் இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments: