News Just In

3/01/2020 12:19:00 AM

கல்லடி பாலத்தில் இடம்பெற்ற ஒளவை விழா நிகழ்வுகள்

மட்டக்களப்பில் ஒளவை விழா 2020 நிகழ்வுகள் சனிக்கிழமை (29.02.2020) கல்லடி பாலா முன்றலில் கதிரவன் பட்டிமன்ற தலைவர் த.இன்பராஜா தலைமையில் நடைபெற்றது 

நிகழ்வின் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா,மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டாக்டர் கலாரஞ்சினி கணேசலிங்கம் ஆகியோர், கலந்துகொண்டதுடன், பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம், கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ச.நவநீதன், 

இலங்கை தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் கி.துரைராஜசிங்கம், முன்னைநாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார்,இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபன உதவிப் பணிப்பாளர் கலாநிதி எஸ்.மோசஸ், விபுலானந்த அழகியற் கற்கைகள் நிறுவக பணிப்பாளர் திருமதி அம்மன்கிளி முருகதாஸ், பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஹரிகரராஜ், கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் திருமதி ரூபி வலன்ரினா பிரான்சிஸ் ஆகியோரும் வர்த்தக சங்க உறுப்பினர்கள், கலைஞர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.

அதிதிகள் வரவேற்புடன் ஆரம்பமான இந்த நிகழ்வில், ஒளவையாரின் சிலைக்கு மாலை அணிவித்தல், மங்கல விளக்கேற்றல்,  தமிழ் மொழி வாழ்த்து, கவிதை, வில்லுப்பாட்டு, யோகாசன நிகழ்வுகள், பட்டிமன்றம், அதிதிகள் உரை, ஒளவை நூல் வெளியீடு போன்ற பல அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றதுடன், ஒளவை விழாவை முன்னிட்டு நடாத்தப்பட்ட போட்டிகளில் வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டது.













































No comments: