News Just In

3/01/2020 08:28:00 AM

வேலையில்லா பட்டதாரிகளுக்கான நியமனக் கடிதங்கள்! இன்று விசேட தபால் விநியோகம்!!

வேலையில்லாத பட்டதாரிகளை அரச சேவையில் பயிலுனர்களாக இணைப்பதற்கான நியமன கடிதங்களை விநியோகிப்பதற்காக இன்றைய தினம் விசேட தபால் விநியோக தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த நியமன கடிதங்கள் இன்றைய தினத்தினுள் விசேட தபாலில் விநியோகிக்கப்படும் என பொது நிர்வாக மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் சிறிபால ஹெட்டியரச்சி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஏற்கனவே அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்த்தன கருத்து தெரிவிக்கையில்
நியமன கடிதங்கள் பெறும் அனைத்து பட்டதாரிகளுக்கும் 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் 01ஆம் திகதி தொடக்கம் 2021ஆம் ஆண்டு மார்ச் 01ஆம் திகதி வரையில் பயிற்சிகள் வழங்கப்படும் எனவும்

இந்த ஒரு வருடபயிற்சிக் காலத்தில் இவர்களுக்கு 20,000 ரூபா மாதாந்த கொடுப்பனவு வழங்கப்படும். அதன் பின்னர் அவர்கள் முறையான அரச சம்பளப் பட்டியலுக்குள் உள்வாங்கப்படுவார்கள்.

மேலும், இந்த நியமனத்தில் இவர்கள் நியமனம் பெறும் இடத்தில் கட்டாயம் ஐந்து ஆண்டுகள் பணிபுரிய வேண்டும். அதன் பின்னரே இடமாற்றத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் எனவும் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments: