News Just In

2/29/2020 08:15:00 PM

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் மாவளையாறு கைலன் வித்தியாலய இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி

(எஸ்.சதீஸ்)
மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஏறாவூர் பற்று கோட்டத்தில்அமைந்துள்ள மாவளையாறு கைலன் வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் விளையாட்டுப் போட்டி இன்று நடைபெற்றது.

பாடசாலை அதிபர் இரா. நடேசபதி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.

அதிதிகள் வரவேற்பு, இறைவணக்கம், தேசியகொடி ஏற்றல், தேசியகீதம் இசைத்தல், ஒலிம்பிக் தீபம் ஏற்றுதல், அணிநடை போன்ற நிகழ்வுகளுடன் இவ் விளையாட்டுப் போட்டி ஆரம்பமானது.

இதில் மாணவர்களின் குறுக்குப் பாய்தல், 60 மீட்டர் ஓட்டம், பந்து எறிதல், உயரம் பாய்தல், தடைதாண்டி ஓடுதல் உள்ளிட்ட பல போட்டிகள் நடைபெற்றது.

இப் போட்டிகளில் பங்கு கொண்ட அனைத்து மாணவர்களுக்கும் இங்கு வருகைதந்த அதிதிகளால் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டதுடன் போட்டியில் 1ம் நிலைக்கு தெரிவான மாணவர்களுக்கு வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டது.

மட்டக்களப்பு நகரத்திலிருந்து மிக தூரத்தில் அமைந்துள்ள பாடசாலைகளில் இந்த கைலன் வித்தியாலயமும் ஒன்றாகும் இம் மாணவர்களின் கல்வி, கலாசாரம், விளையாட்டுக்களை வௌியில் கொண்டுவர நாம் அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் என இந் நிகழ்வில் கலந்து கொ ண்ட வலயக் கல்விப் பணிப்பாளர் சிவானந்தம் சிறிதரன் தெரிவித்தார்.

இந் நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர் குணரத்தினம், வெட்ஸ் அமைப்பின் திட்ட முகாமையாளர் டிராஜ் எம். டொமினிக், ஆசிரியர்கள், அதிபர்கள் பெற்றோர்கள் என பலர் கலந்துகொண்டனர்.

No comments: