மட்டக்களப்பில் கொரனா வைரசுக்கும் அதுமாதிரி ஏற்படப் போகும் தொற்று நோய்களுக்குமான வைத்தியசாலையாக, தொழுநோய் வைத்தியசாலையான மாந்தீவு வைத்தியசாலையை மாற்றுவதற்கான முன்மொழிவு ஒன்றை தயாரித்து அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் சுகாதார அமைச்சிக்கும் பிரதமர் செயலாளர் உட்படபன்னிரண்டு நபர்களுக்கு அனுப்பிவிட்டு ஊடகங்களுக்கு அதனை பகிர்ந்துள்ளது.உண்மையில் பிரதிகள் என போடப்பட்டவர்களின் கைகளுக்கு கிடைப்பதற்கு முன்பாகவே ஊடகங்களில் வெளிவந்ததனால் அதுபேசு பொருளாகி அரசியலாகிக் கொண்டிருக்கிறது.
இச்செய்தியை ஊடகங்கள் வாயிலாக அறிந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் செயலாளர் பூ.பிரசாந்தன் உடனே 27/02/2020 வியாழக்கிழமை சுகாதார அமைச்சுடன் தொடர்பு கொண்டு பேசினார்.
இவ்வாறானதொரு யோசனை ஒரு முன்வைப்பே தவிர வேறில்லை எனவும் கூறப்பட்டது. எக்காரணம் கொண்டும் இத்திட்டம் மட்டக்களப்பில் நடைபெற அனுமதிக்கமாட்டோம் எனவும் அப்படி எண்ணங்கள் இருக்குமாயின் உடனடியாக நிறுத்தும்படியும் செயலாளரினால் வலியுறுத்தப்பட்டது.
மட்டக்களப்பு வைத்தியசாலைப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்ட, கட்சிச் செயலாளர் பூ.பிரசாந்தன், ஆலோசகர் ஸ்டாலின் ஞானம், மற்றும் ஊடகப்பிரிவு படகு பத்திரிகை ஆசிரியர் ச.மணிசேகரன் ஆகியோர் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்து கலந்துரையாடியதுடன்,
மட்டக்களப்பு வைத்தியசாலைப் பணிப்பாளருடன் தொடர்பு கொண்ட, கட்சிச் செயலாளர் பூ.பிரசாந்தன், ஆலோசகர் ஸ்டாலின் ஞானம், மற்றும் ஊடகப்பிரிவு படகு பத்திரிகை ஆசிரியர் ச.மணிசேகரன் ஆகியோர் பணிப்பாளர், பிரதிப் பணிப்பாளர் ஆகியோரை நேரில் சந்தித்து கலந்துரையாடியதுடன்,
அவர்களும் இவ்விடயம் பற்றி ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களினூடாக மட்டுமே அறிந்ததாகவும் இந்த முன்மொழிவை தாங்கள் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும், நிராகரிப்பதாகவும், எதிர்ப்பதாகவும் தெரிவித்தனர்.
கொனரா வைரசிலிருந்து பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளை பெயரளவிலின்றி பூரணமான முறையில் சிகிச்சையளிப்பதற்கான ஏற்பாடுகள் வைத்தியசாலையில் ஏற்படுத்தப்பட்டு தயார்நிலையில் உள்ளதாகவும் கூறினர்.
இதனை இன்று அரசியலாக்க சிலர் முனைகின்றனர்.உண்மையில் இந்த முன்மொழிவை கொண்டு சென்றவர்களை இனங்காண வேண்டும்.

No comments: