News Just In

2/29/2020 10:55:00 AM

அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட தீர்மானம்!!

ஆசிரியர் அதிபர் இடைக்கால சம்பள சுற்றறிக்கை மற்றும் கோரிக்கைகளை வென்றெடுப்பதற்கு அழுத்தம் கொடுக்கும் தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் மற்றும் மாகாண கல்வி அமைச்சு செயலாளர்களுக்கு கடிதங்கள் அனுப்பியுள்ளதாக இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் உபதலைவர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்

மேலும் கடிதத்தில் இடைக்கால சம்பள முன்மொழிவுகளை நடைமுறைப்படுத்தல் மற்றும் முக்கிய கோரிக்கைகளை வென்றெடுப்பதற்காக 2020 பெப்ரவரி 26ஆம் திகதி நாட்டின் சகல பாடசாலைகளின் அதிபர் ஆசிரியர்கள் சுகயீன விடுமுறையை அறிவித்துவிட்டு பாடசாலைக்கு சமூகமளிக்காத போராட்டத்தை மேற்கொண்டதோடு,

கல்வி அமைச்சுக்கு முன்பதாக பாரிய ஆர்ப்பாட்டப் பேரணி ஒன்றையும் நடத்தியிருந்தனர் எனினும் எமது கோரிக்கை தொடர்பாக சாதகமான பதிலை வழங்க கல்வி அமைச்சு மற்றும் அரசாங்கமோ சாதகமான பதிலை வழங்கவில்லை என்பதை நீங்கள் அறிவீர்கள். இந்நிலையில் தொடர் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட எமது சங்கங்கள் தீர்மானித்துள்ளோம்.

அதனடிப்படையில் 2020.02 .27ஆம் திகதி முதல் பாடசாலையில் காலை 7:30 முதல் பிற்பகல் 1:30 வரை வகுப்பறையில் கற்பித்தல் செயல்பாடுகள் மாத்திரம் ஈடுபடுவதற்கும் ஏனைய மேலதிக வேலைகளில் இருந்து அனைத்து அதிபர் ஆசிரியர்களும் விடுபட்டு, சட்டப் படி வேலை செய்தல் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபட உள்ளோம் என்பதனை இக்கடிதத்தின் மூலம் அறியத்தருகின்றோம்.

எனினும், கல்வி அமைச்சு முன்மொழிந்த இடைக்கால சம்பளத்தை வழங்கும் சுற்றறிக்கையை வெளியிடுதல் மற்றும் ஏனைய கோரிக்கைகளான, 23 வருடங்களாக காணப்படும் அதிபர் ஆசிரியர்களின் சம்பள முரண்பாட்டை நீக்கி சம்பள உயர்வை வழங்க வேண்டும் என்றும்,

அரசியல் பழிவாங்கல் என்ற போர்வையில் உயர்பதவி மற்றும் வரப்பிரசாதங்களை வழங்குதலை நிறுத்துதல். காகிதாதிகள் நிரப்புதல் மற்றும் ஆசிரியர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தும் மேலதிக செயல்பாடுகளை நிறுத்துதல். பெற்றோர்களிடம் இருந்து பணம் அறவீடு செய்வதை நிறுத்தி மொத்த தேசிய வருமானத்தில் கல்விக்கு 6% சதவீதத்தை ஒதுக்கவேண்டும் என்றும்,

2016 க்கு பின்பு நியமனம் பெற்ற ஆசிரியர்களுக்கு ஓய்வூதியத்தை மீண்டும் வழங்க வேண்டும். இடை நிறுத்தப்பட்ட தேசிய பாடசாலை ஆசிரியை இடமாற்றத்தை நடைமுறை படுத்த வேண்டும் போன்ற கோரிக்கைகளை உள்ளடக்கிய கடிதத்தை அனுப்பி உள்ளதாக சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்துள்ளார்.

No comments: