News Just In

2/29/2020 11:22:00 AM

பெரும்போகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை!

2019 ஆம் ஆண்டு பெரும்போகத்தில் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்கும் நடவடிக்கைகள் நாளை மறுதினம் ஆரம்பமாகிறது. பாதிக்கப்பட்டவர்களுக்கு வங்கிக் கணக்கின் ஊடாக நஷ்டஈட்டுத் தொகை வழங்கப்படும்.

எதிர்வரும் மூன்றாம் திகதியிலிருந்து விவசாயிகள் தமது வங்கிக் கணக்குகளில் இதற்கான நிதியினை பெற்றுக்கொள்ள முடியும் என விவசாய காப்புறுதி சபை குறிப்பிட்டுள்ளது.

குறித்த நஷ்டஈட்டை பெறுவதற்கு முறையாக விண்ணப்பித்திருந்தும் நஷ்டஈடு கிடைக்கப்பெறாவிடில் அது தொடர்பில் ஆறாம் திகதிக்கு முன்னர் மேன்முறையீடு செய்ய முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments: