News Just In

2/19/2020 04:28:00 PM

கிழக்கில் புதிய கூட்டமைப்பு தொடர்பாக தேர்தல் ஆணையாளருடன் TMVP யினர் பேச்சுவார்த்தை!!


கிழக்கிலே பல தமிழ் கட்சிகள் ஒன்றிணைந்து கூட்டு கட்சி ஒன்றை உருவாக்கும் முயற்சி முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இது தொடர்பாக தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியினுடைய செயலாளர் பூ.பிரசாந்தன் ஊடக சந்திப்பில் குறித்த சில கட்சிகளுடன் நட்பு ரீதியான பேச்சுவார்த்தையினை முன்னெடுக்க போவதாக குறிப்பிட்டார்.

இக்கூட்டு உருவாக்கத்தின் சட்டச் சிக்கல்கள் தொடர்பாக தேர்தல்கள் ஆணையாளருடன் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினர் இன்று பேச்சுவார்த்தை நடாத்தியுள்ளனர் என தெரியவருகிறது. இது தொடர்பாக உத்தியோக பூர்வமான தகவல்கள் வெளியாகாத நிலையில், சமூக வலைத்தளங்ககளில் குறித்த விடயம் பேசுபொருளாக மாறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: