News Just In

2/19/2020 04:47:00 PM

திருக்கோவில் பகுதியில் பெண் ஒருவர் கடலில் மூழ்கிய சம்பவம்-காப்பாற்ற சென்ற கடற்படையினர்!


திருக்கோவில், சங்கமம் கிராமம் கடற்பரப்பில் கடலில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்த பெண் ஒருவர் கடற்படையினரால் நேற்று (18) காப்பாற்றப்பட்டுள்ளார்.

குறித்த கடற்பரப்பில் நீராட சென்ற குறித்த பெண் கடல் அலையில் சிக்கி இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது, குறித்த கடற்பரப்பில் தூய்மைப்படுத்தும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த கடற்படையினர் உடனடியாக செயற்பட்டு குறித்த பெண்ணை உயிருடன் காப்பாற்றியுள்ளனர்..

பின்னர் குறித்த பெண் சிகிச்சைக்காக திருக்கோவில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.

68 வயதுடைய குறித்த பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு காப்பாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments: