இந்நிலையில் தென்கொரியாவில் இருந்து வருகை தரும் பயணிகள் , கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் விசேட சோதனைக்கு உட்படுத்தப்படவுள்ளதாக தொற்றுநோய் ஆய்வு நிலையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை வரை , கொரோனா வைரஸினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் நால்வர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக தொற்றுநோய் தொடர்பான சிரேஷ்ட நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர குறிப்பிட்டனர்.
கொரோனா பரவும் வேகம் அதிகரித்ததை தொடர்ந்து தென்கொரியாவின் சில தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக தென்கொரியாவிற்கான இலங்கைத் தூதரகம் தெரிவித்துள்ளது.
குறித்த தொழிற்சாலைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு விடுமுறை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுளளதாக தூதரகத்தின் தொழிலாளர் பிரிவின் தலைமை அதிகாரி செனரத் யாப்பா குறிப்பிட்டார்
No comments: