விஸ்வகலா விளையாட்டுக் கழக தலைவரால் ஆரையம்பதி, வம்மிக்கேணி முத்துமாரியம்மன் ஆலய புனருத்தாபனப் பணிக்கான உதவி வழங்கல்..
ஆரையம்பதி, விஸ்வகலா விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில், இக் கழகத்தினுடைய மதிற்பிற்குரிய தலைவரும், சமூக சேவையாளருமாகிய
திரு. இரா சுரேஷ் அவர்களின் நிதி ஒதுக்கீட்டிலும், பங்களிப்பிலும் ஆரையம்பதி வம்மிக்கேணி, ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலய புனருத்தாபன மற்றும் கும்பாபிஷேக நிகழ்வுக்கான தயார்படுத்தலுக்காக வர்ணப்புச்சு வகைகள் (பெயின்ட்), மற்றும் அதனுடன் இனைந்த சாதனங்கள் என்பன ஆலய நிர்வாகத்தினரின் கையளிக்கும் நிகழ்வானது இன்றைய தினம் 2020.02.28ம் திகதி (வெள்ளிக்கிழமை) ஆலய முன்றலில் மிகச்சிறப்பாக இடம்பெற்றது.
இந் நிகழ்வில் ஆரையம்பதி விஸ்வகலா விளையாட்டுக் கழகத்தின் தலைவர் மற்றும் குடும்பத்தினர், கழக உறுப்பினர்கள், ஆலய நிர்வாகத்தினர், பொது மக்கள் என சகலரும் கலந்து சிறப்பித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



No comments: