
ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மக்கள் தங்களது உரிமைகளை அறிந்து அரசு அதனை அமுலாக்குவதற்கு வலியுறுத்த வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீட சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.ஏ.எம். ஹக்கீம் தெரிவித்தார்.
சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் (Pநழிடநள ஊழடடநஉவiஎந கழச ஊடiஅயவந துரளவiஉந) அமைப்பினால் நடத்தப்பட்ட பொருளாதார, சமூக, கலாசார உரிமைகளும் அரசின் கடமைகளும் எனும் தொனிப்பொருளிலமைந்த மக்கள் கலந்துரையாடல் Pநழிடநள னுயைடழபரந ழn நுஉழழெஅiஉ ளுழஉயைட யனெ ஊரடவரசயட சுiபாவள யனெ ளுவயவந டுயைடிடைவைல) மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் சர்வோதய மாவட்டப் பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.
சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பின் தலைவர் வைரமுத்து முத்துலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மட்டக்களப்பு திருகோணமலை அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த சமூக மட்ட அமைப்புக்களின் செயற்பாட்டாளர்கள் சுமார் 140 பேர் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் தொடர்ந்து உரையாற்றிய சட்டத்தரணி ஹக்கீம், குடியியல், அரசியல், பொருளாதார, சமூக, கலாசார உரிமைகள் நாட்டு மக்களுக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன.
எனவே இந்த உரிமைகளுக்குள் உள்ளடக்கப்பட்ட விடயங்களை குடிமக்கள் அறிந்து வைத்துக் கொண்டு அவற்றை அரசிடமிருந்து பெற்றுக் கொள்வதற்கு முனைப்புக் காட்ட வேண்டும்.
சமூகம் தனது இருப்பைப் பேண வேண்டுமாக இருந்தால் தற்போது நமக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ள உரிமைகளையும் அதில் அங்கீகரிக்கப்படாத, ஆனால் மனித உரிமைகளாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து வகை உரிமைகளையும் அடைந்து கொள்வதற்கு குடிமக்கள் ஆர்வம் காட்ட வேண்டும்.
சமூக கலாசார உரிமைகளை அடைந்து கொள்வதன மூலமாக எங்களுக்கே உரித்தான தனித்துவத்தையும் பாதுகாத்துக் கொள்ள முடியும்.
குடியியல், அரசியல் உரிமை என்பது மனித விடுதலையோடு, மனித கௌரவத்தோடு உயிர் வாழ்தலோடு; தொடர்புபட்டது.
மனிதன் மனிதனாகப் பிறந்ததன் காரணமாக அவன் இயற்கையாக அனுபவிக்க வேண்டிய அத்தனை உரிமைகளையும் மனித உரிமைகள் என்போம். எனவே, இதுபற்றி அடிமட்ட மக்கள் உட்பட நாட்டின் அனைத்துப் பிரஜைளும் விழிப்பூட்டப்பட வேண்டும்.
ஒற்றுமை விழிப்புணர்வு கல்வி சார்ந்த வளர்ச்சி, ஆகிய இந்த மூன்று அடிப்படைகளையும் முன்னேற்றுவதன் மூலம்தான் எங்களது உரிமைகளைப் பெற்றுக் கொள்ள முடியும்.
எங்களது உரிமைகள் மீறப்படுகின்றதா என்பதை அறிவதற்கு என்னவகையான உரிமைகள் எங்களுக்கு உள்ளன என்பதை முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும்.
ஆனால் துரதிருஷ்டவசமாக நம்மில் பலருக்கு நாம் என்ன வகையான உரிமைகளை இயற்கையாகக் கொண்டிருக்கிறோம், தற்போது வரை நமக்குக் கிடைத்தவை என்ன கிடைக்காதவை என்ன என்பது பற்றி விழிப்புணர்வு இல்லாதவர்களாக இருக்கின்றோம்.
எனவே, இதுபற்றி விழிப்புணர்வுகளை நாம் பெற்றாக வேண்டும். அப்பொழுதுதான் மீறப்பட்ட உரிமைகளை மீளவும் பெற்றுக் கொள்வதோடு இனிமேல் மீறப்படப்போகின்றது என அறியக் கிடைக்கும் உரிமைகளையும் தடுத்து நிறுத்த முடியும்' என்றார்.
சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பின் பணிப்பாளர் சபைச் செயலாளர் ரஜனி ஜெயப்பிரகாஷ், உறுப்பினர் கே. நடராஜா, நிருவாக அலுவலர் ஜெயசீலி இந்திரன், மட்டக்ளப்பு திட்ட உத்தியோகத்தர் ரீ. ஸ்ரீபாலு, திருகோணமலை மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர்களான எஸ். பவானி, பி. சரிதா, அம்பாறை மாவட்ட வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.பி. ராஜா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.
சூழலியல் நீதிக்கான மக்கள் கூடல் அமைப்பின் கிழக்கு மாகாண பணிப்பாளர் சபை தலைவராக வி.கே. முத்துலிங்கமும், அதன் பணிப்பாளர் சபை உறுப்பினர்களாக கே. லவகுசராசா, எஸ். மேரி, கே. நடராசா, ரஜனி ஜெயப்பிரகாஷ், ஆகியோருட்பட 5 பேர் கடமையாற்றுகின்றனர்.








No comments: