
காத்தான்குடி- மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் இரு பேருந்துகள் மோதி விபத்து, இன்று(27) மதியம் மட்டக்களப்பு நோக்கி சென்ற தனியார் மற்றும் அரச பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது.
பயணிகளை ஏற்றும் போட்டித்தன்மை காரணமாக ஏற்பட்ட முரண்பாட்டில் இரு பேருந்துகளும் வேகமாக ஓடி இவ் விபத்து உண்டுபண்ணப்பட்டதாக விபத்தின் போது இருந்த பயணிகள் தெரிவித்தனர்.
இவ் விபத்தில் எவருக்கும் பாதிப்பு இல்லாத நிலையில், இரு பேருந்துகளுக்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பான விசாரணையினை காத்தான்குடி போக்குவரத்து பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.


No comments: