News Just In

2/27/2020 06:47:00 PM

புத்தூரில் சடலத்துடன் ஒரு பகுதியினர் காத்திருப்பு: பொலிஸ், இராணுவம் குவிப்பு!


புத்தூர் மேற்கு, சிறுப்பிட்டி கலைமதி கிந்துப்பிட்டி மாயானத்தில் சடலம் எரியூட்டுவதற்கு தயாராவதற்கு உள்ள நிலையில் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பல நூற்றுக் கணக்கான மக்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அதனால் புத்தூர் மயானத்தில் சடலத்தை தகனம் செய்ய வந்தவர்கள் மயானத்தில் இருந்து 500 மீற்றர் தூரத்தில் பொலிஸாரால் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

புத்தூர் கலைமதி கிராமத்தில் உள்ள மயானத்தை அகற்றுமாறு மயானத்தை சூழ வசிக்கும் மக்கள் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.
அந்த மயானத்தில் சடலங்களை எரியூட்டுவதற்கு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: