News Just In

2/27/2020 07:40:00 PM

மட்டக்களப்பில் தொழில் வழிகாட்டும் சந்தை


ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்ட தொழிற் சந்தை வழி காட்டுதலுக்கான திறவு கோல் எனும் தொனிப்பொருளில் தொழில் வழிகாட்டும் சந்தை வியாழக்கிழமை (27.02.2020) மட்டக்களப்பு திருகோணமலை வீதியிலுள்ள செல்வநாயகம் மண்டபத்தில் இடம்பெற்றது.

மாவட்ட அரசாங்க அதிபர் கலாமதி பத்மராஜா நிகழ்வை சம்பிரதாய பூர்வமாக ஆரம்பித்து வைத்தார்.

மாவட்ட செயலகம் மனிதவள மேம்பாட்டு திறன் அபிவிருத்தி திணைக்களம் மற்றும் எஸ்கோ நிறுவனம் ஆகியவை இணைந்து இதனை நடாத்தின.

நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் சுதர்சினி ஸ்ரீகாந்த், உதவி மாவட்ட செயலாளர் ஏ. நவேஸ்வரன், எஸ்கோ நிறுவனத்தின் உதவிப்பணிப்பாளர் கோதைநாயகி, தொழில் நுட்பக்கல்லூரி அதிபர்கள், தேசிய தொழில் பயிற்சி கைத்தொழில் அதிகார சபை, இலங்கை சமுத்திரப் பல்களைக்கழகம், தனியார் தொழில் வழங்குனர்கள், இளைஞர் யுவதிகள் உட்பவட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

நினழ்வில் அரசாங்க அதிபர் கலாமதி உரையாற்றுகையில் மனிதவள மேம்பாட்டு அபிவிருத்தி திணைக்கத்தினூடாகவும் தொழில்நுட்பக் கல்லூரிகளினூடாகவும் தனியார் தொழிற்பயிற்சி நிறுவனங்களினூடாகவும் பயிற்சிகளை பயிற்றுவித்து துறைசார்ந்த தொழில்களில் நியமிப்பதினூடாக வினைத்திறன் தொழிலினை செய்வற்கு ஏதுவானவர்களாக இந்த இளைஞர் யுவதிகளை மாற்றியமைப்பது சாலச்சிறந்தது' என்றார்.










No comments: