News Just In

2/27/2020 05:34:00 PM

மட்டக்களப்பில் வெளிநாட்டு கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு வைத்தியசாலை அமைக்க திட்டம்!-எச்சரிக்கை !!


மட்டக்களப்பில் காணப்படும் மாந்தீவினை கொரோன வைரஸ் நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்கும் இடமாக மாற்றுவதற்கு வைத்தியர் அமைப்பு ஒன்று பரிந்துரை செய்துள்ளது. இந்த செயற்பாட்டை கண்டித்து ஊடக சந்திப்பொன்றை இன்று நிகழ்த்திய இராசமாணிக்கம் அமைப்பின் தலைவர் சாணக்கியன் அவர்கள் பின்வருமாறு தெரிவித்தார்.

மட்டக்களப்பு மாந்தீவில் 100 க்கும் மேற்பட்ட சிறிய கட்டிடங்கள் காணப்படுகின்றது. இந்த இடங்கள் அனைத்தினையும் ஒரு சுற்றுலா மையமாக மாற்றுவோம், இந்த தீவானது நீண்ட மைல் தூரம் பயணம் செய்யும் பறவைகள் வரும் இடம், வேற வேற வெளிநாடுகள் இருந்து பறவைகள் இங்கு வருகின்றது.

தற்போது மட்டக்களப்பில் ஜியோ சயன்ஸ் போர் நேச்சர் எனும் அமைப்பு இந்த தீவில் இருக்கும் முக்கியத்துவத்தினை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள், சுற்றாடலுக்கு தேவையான பல அம்சங்கள் இந்த தீவில் இருக்கின்றது. இவை அனைத்தும் சுற்றுலாவிற்கு மிகவும் முக்கியத்துவமான ஒரு இடம், 

அதே இடத்தில் கொரோனா வைரஸ் எனும் நோய் எப்படி பரவுகிறது என்பது இன்னும் அடையாளப்படுத்தப்படவில்லை, இந்த கொரோனா வைரஸ் பரவுவது வெளவ்வால்களால் என்றும் சொல்கிறார்கள், இந்த கொரோனா வைரஸ் வொளவால்களால் பரவுவதாக இருந்தால் அந்த தீவில் உள்ள வெளிநாட்டு பறவைகளில் இருந்து பரவுதாக தெரியவில்லை.

அந்தவகையில் ஏன் இந்த மாந்தீவு எனும் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வளத்தினை இந்த விடயத்திற்கு பயன்படுத்த விரும்புகிறார்கள் என்பது தெரியவில்லை. அரச வைத்திய அமைப்புதான் இந்த ஜனாதிபதிக்கு ஆதரவு வழங்கியது அதே அமைப்புதான் கொரோனா வைரஸ் சிக்கிச்சைக்கான வைத்தியசாலையினை மட்டக்களப்பில் கட்டுவதற்கு முயற்சி எடுத்துள்ளது.

இதனை எந்த ஒரு அரசியல்வாதியும் கண்டுகொள்ளவில்லை, இளைஞர்கள் அனைவரும் நாங்கள் ஒன்று சேர வேண்டு, ஏனென்றால் நாங்கள் நிறைய விடயங்களுக்கு ஆர்ப்பாட்டம் செய்துள்ளோம், இது மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஒரு முக்கியமான வளம், இந்த வளத்தினை நாங்கள் விட்டுக்கொடுக்க முடியாது. 

அனைத்து இளைஞர்களும் ஒன்று சேர வேண்டும் இதற்கு மட்டக்களப்பு துறை சார் அமைப்பும் இதனை செய்யக் கூடாது என்று சொல்லி சுகாதார அமைச்சிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறார்கள், அந்த வகையில் அவர்களுக்கும் என்னுடைய நன்றிகள், இலங்கையில் தீவு ஒன்றுதான் இதற்கு தேவை என்று சொன்னால் கல்பிட்டி எனும் இடத்தில் 14 தீவுகள் காண முடியும், அந்த தீவுகளை விடுத்து இந்த மாந்தீவினை கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு கொடுக்க வேண்டும் எனும் தேவை இல்லை, கல்பிட்டி எனும் இடம் இலங்கை விமான நிலையத்திற்கு அண்மையில் உள்ள ஒரு பிரதேசம், அந்த புத்தளம் மாவட்டத்திலே தீவினை எடுத்து செய்யலாம்.

மட்டக்களப்பு மாவட்டத்திலே இருக்கும் இந்த வளத்தினை இளைஞர்கள், பொதுமக்கள் கொரோனா வைரஸ் நோயாளிகளுக்கு பயன்படுத்துவதற்கு அனுமதிக்க முடியாது. தற்கு தேவைப்பட்டால் மிஷன் போர் 2020 இல் இணைந்துள்ள நிறைய இளைஞர்கள் எங்களுடன் பேசி இருக்கிறார்கள் எதிர்ப்பு தொடர்பான செயற்பாட்டில் இறங்க வேண்டுமா என்று.

இடந்தாலும் கூட அரசாங்கம் சரியான முடிவினை எடுக்கும் என்ன காரணம் என்றால், இது மட்டக்களப்பிற்கு தேவையில்லாத ஒரு விடயம், அப்படி தேவைப்பட்டால் கல்பிட்டியில் எடுக்கலாம், இல்லையென்றால் இலங்கையில் வேறு எத்தனையோ பிரதேசங்கள் இருக்கின்றது. சனத்தொகை குறைவாக இருக்கின்ற மாவட்டங்கள் இருக்கின்றது. 

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு ஒரு தேவையில்லாத விடயம், இந்த விடயத்தினை ஏற்றுக்கொள்ளவும் முடியாது. தயவு செய்து இலங்கை அரச வைத்திய சங்கம் உடனடியாக நீங்கள் கொடுத்து இருக்கும் முன்மொழிவினை திரும்பப் பெற்ற வேண்டும்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் கீழ் உள்ள இந்த மாந்தீவினை, மாநகர சபைக்கோ அல்லது மாவட்ட செலகத்திற்கோ பாரப்படுத்துங்கள், இது தொடர்பாக வெளிநாட்டு முகவர்களுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, மட்டக்களப்பில் பொருளாதாரத்தினை வளர்க்கும் ஒரு தளமாக நாங்கள் மாற்றுவோம், அதை விடுத்து கொரியாவிலோ, சீனாவிலோ இருந்து வரும் நோயாளிகளை பரிசோதிக்கும் இடமாக இதனை மாற்ற விட முடியாது. என அவர் மேலும் தெரிவித்தார்.

No comments: