சுயதொழில் முயற்சிக்காக பெண்களை வலுவூட்டல் எனும் தொனிப்பொருளிலான கண்காட்சியானது இன்று (27) கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர் நா.தனஞ்சயன் முழுமையான பங்களிப்புடன்
கிழக்கு மாகாண சுற்றுலா, உள்ளூராட்சி, கிராம கைத்தொழில் மற்றும் கிராம அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் U.L.A.அஸீஸ் தலைமையில் மட்டக்களப்பு இந்துக் கல்லூரி வளாகத்தில் ஆரம்பமானது.
இம்மாதம் 27,28,29 ஆகிய திகதிகளில் நடைபெறவுள்ள இக்கண்காட்சிக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களும்,
கௌரவ அதிதிகளாக மட்டக்களப்பு அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான உறுப்பினருமான எஸ்.வியாழேந்திரன், பாராளுமன்ற உறுப்பினர் சீ.யோகேஸ்வரன்,
சிறப்பு அதிதிகளாக கிழக்கு மாகாண பிரதம செயலாளர் துஷித அவர்களும், அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபர், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பத்மராஜா, திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் ஆகியோரும் கலந்து சிறப்பித்த இந் நிகழ்வில் பல அரச அதிகாரிகளும், கிராம அபிவிருத்தித் திணைக்கள அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர்.
கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் பயிற்சி பெற்ற சுமார் 1200 மாணவர்களின் பல தரப்பட்ட கைவினை மற்றும் தொழில்நுட்ப பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
கிராமிய சொந்த தயாரிப்பு பொருட்களை இணையத்தின் ஒன்லைன் வாயிலாக கொள்வனவு செய்ய rural products.lk எனும் இணையத்தளம் கிராம அபிவிருத்தித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இன்று ஆளுநரால் திறந்து வைக்கப்பட்டது.























































No comments: