இன்று (27) அதிகாலையில் இடம்பெற்ற பெற்றோல் குண்டுத் தாக்குதலில் புகையிரத உதவி பாதுகாப்பு அத்தியட்சகர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ அறையில் புகையிரத உதவி பாதுகாப்பு அத்தியட்சகர் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த வேளையில் ஜன்னலின் ஊடாக இனந்தெரியாத நபரால் பெற்றோல் குண்டு வீசப்பட்டுள்ளது.
இந்த சம்பவமானது அநுராதபுரம் பிரதான புகையிரத நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள வடக்கு மற்றும் கிழக்கு புகையிரத பாதுகாப்பு தலைமையகத்தில் இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவத்தில் எரிகாயமடைந்த குறித்த புகையிரத உதவி பாதுகாப்பு அத்தியட்சகர் அநுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருகின்றனர்.
2/27/2020 12:35:00 PM
பெற்றோல் குண்டுத் தாக்குதலில் புகையிரத உதவி பாதுகாப்பு அத்தியட்சகர் காயம்!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: