News Just In

2/27/2020 03:08:00 PM

ஆறு மாதக் குழந்தை மேசையிலிருந்து விழுந்து பரிதாபமாக பலி


புத்தளம் நவத்தேகம-மஹமெத்தேவ பிரதேசத்தில் ஆறு மாதக் குழந்தையொன்று மேசையிலிருந்து தவறி விழுந்த நிலையில் நவத்தேகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் நேற்று (26) மாலை உயிரிழந்துள்ளதாக நவத்தேகம பொலிஸார் தெரிவித்தனர்.

தனுஜ தாம்ஷ என்ற ஆண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் இடம்பெற்றபோது குழந்தையின் தாய் வீட்டில் இல்லை என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. 

இந்நிலையில் சில சிறுவர்கள் குறித்த குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்தபோதே இந்த அனர்த்தம் நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதையடுத்து குறித்த குழந்தையின் தந்தையை பொலிஸார் கைது செய்துள்ளதுடன் குறித்த சம்பவம் தொடர்டபில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments: