News Just In

2/27/2020 09:20:00 AM

அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக முஸ்லிம் காங்கிரஸ் இனிமேல் இருக்காது-தயாசிறி ஜயசேகர

அரசாங்கத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இனிமேல் திகழப்போவதில்லை. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது. நடைபெறவுள்ளபொதுத் தேர்தலிலும் இது நிரூபிக்கப்படும் என

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளரும் கைத்தொழில் மற்றும் வர்த்தக இராஜாங்க அமைச்சருமான தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமையகத்தில் நேற்று (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்...
இந்த நாட்டின் அரசாங்கத்தை கையாளும் உரிமை ரவூப் ஹக்கீமுக்கு கிடையாது. ஐக்கிய தேசியக் கட்சி அதிகாரத்தில் இருந்த வேளையில் முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தது.

ஆனால் கடந்த வருடம் நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலுடன் இந்த நிலைமை மாறிவிட்டது. பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமின் தலைமையிலான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இனிமேலும் அரசாங்கங்களை தீர்மானிக்கும் சக்தியாக இருக்காது.

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திர பொதுஜன கூட்டணி 120 ஆசனங்களுக்கு மேல் வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைக்கும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

No comments: