பாடசாலை மாணவர்கள் சிலர் நீராடியபோது அதில் ஒரு மாணவர் நீரில் மூழ்கி நேற்று (26) மாலை உயிரிழந்துள்ளார்.
பாடசாலை மாணவர்கள் சிலர் பாடசாலை சென்று வந்ததன் பின்னர் பத்தேகம, கிங் கங்கை முல்கடபல பாலத்திற்கு அருகில் நீராடிய வேளையிலேயே இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
நீரில் மூழ்கி உயிரிழந்தவர் பத்தேகம ஹம்மெலிய பிரதேசத்தை சேர்ந்த 15 வயதுடைய பாடசாலை மாணவர் என தெரியவந்துள்ளது.
உயிரிழந்த மாணவரின் சடலம் பத்தேகம பிரதேச வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பில் பத்தேகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
2/27/2020 09:00:00 AM
பாடசாலை மாணவர் ஒருவர் நீரில் மூழ்கி மரணம்!!
Subscribe to:
Post Comments (Atom)

No comments: