News Just In

2/16/2020 03:15:00 PM

மட்டக்களப்பு-சந்திவெளியில் இடம்பெற்ற விபத்தில் பலியானோர் எண்ணிக்கை இரண்டாக உயர்வு!!

(எஸ்.சதீஸ், சுபா)
மட்டக்களப்பு-ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சந்திவெளியில் இடம்பெற்ற விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இரண்டாக உயர்வடைத்துள்ளது.

குறித்த விபத்தில் கிரான் காளி கோவில் வீதியைச் சேர்ந்த ரங்கன் ராமசாமி (71 வயது) சம்பவ இடத்தில் பலியாகியிருந்த நிலையில் அவருடைய மகனான 41 வயதுடைய ராமசாமி விஜயபாஸ்கர் என்பவரும் உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே அவர் உயிரிழந்துள்ளார்.

ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 04 பேர் இன்று ஞாயிற்றுக்கிழமை முற்பகல் 11 மணியளவில் மட்டக்களப்பை நோக்கி முச்சக்கரசண்டியில் சென்றபோது மட்டக்களப்பில் இருந்து கொழும்பை நோக்கி சென்ற லொறியும் கிரான் சந்தியில் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில்

முச்சக்கரவண்டியை செலுத்திச் சென்றவர் சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதுடன் இதில் பிரயாணித்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 03 பேர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொடர்பான செய்தி....

No comments: