News Just In

2/16/2020 03:55:00 PM

லஞ்சம் பெற்ற பொலிஸ் உத்தியோகத்தர் கைது!

பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் 25,000 ரூபா லஞ்சம் பெற்றமைக்காக லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

போக்குவரத்துப் பிரிவைச் சேர்ந்த மேற்படி உத்தியோகத்தர், முறையான ஆவணங்களின்றி மரப்பலகைகளை ஏற்றிச் சென்ற லொறிக்கு வழக்குத் தொடுக்காமல் இருக்க 25,000 ரூபா லஞ்சம் கோரினார் என்ற முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.

கஹாவத்தை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த இவர் 12,500 ரூபாவைப் பெற்றுக்கொண்டு, மிகுதித் தொகையை பெற்ற நிலையில் லஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டு, நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார்.

அவரை எதிர்வரும் 28 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.

No comments: