News Just In

2/16/2020 02:06:00 PM

மட்டக்களப்பில் சங்காரவேல் பவுண்டேசனால் பல்கலைக்கழக கல்விக்கான புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வு


கிழக்கு மாகாணத்திலிருந்து மருத்துவம், பொறியியல், சட்டம் ஆகிய துறைகளுக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்களுக்கான புலமைப்பரிசில் வழங்கும் 08ஆவது வருட நிகழ்வு இன்று (16) மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் தேசிய பாடசாலையில் சங்காரவேல் பவுண்டேசன் தலைவரும், ஓய்வுநிலை விஞ்ஞான உதவிக்கு கல்விப் பணிப்பாளருமான சோ.சிவலிங்கம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

இந் நிகழ்விற்கு பிரதம அதிதியாக லண்டன்-ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கையம்மன் ஆலய முன்னாள் தலைவர், சட்டத்தரணி து.ரெட்ணசிங்கம் அவர்களும்,

கௌரவ அதிதிகளாக கிழக்கு மாகாணத்திற்கான ஓய்வு நிலை மேலதிக மாகாண கல்விப் பணிப்பாளர் சி.மனோகரன் அவர்களும், ஈச்சிலம்பற்று, ஓய்வுநிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர் க.வெற்றிவேல் அவர்களும், பொத்துவில் தமிழ்ப்பிரிவிற்கான ஓய்வுநிலை கோட்டக் கல்விப் பணிப்பாளர் வ.ஜயந்தன் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அழைப்பு அதிதிகளாக லண்டன்-ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கையம்மன் ஆலய அறங்காவலர் சிங்காரவடிவேல், லண்டன்-ஈலிங் ஸ்ரீ கனக துர்க்கையம்மன் ஆலயத்தின் உறுப்பினர் திருமதி விஜயலட்சுமி, மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் அரசாங்க அதிபர் மா.உதயகுமார், இலங்கை தமிழரசுக் கட்சியின் செயலாளர் K.துரைராஜசிங்கம், மட்டக்களப்பு கல்வி வலயத்தின் முன்னாள் வலயக் கல்விப் பணிப்பாளர் K.பாஸ்கரன், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

சிறப்பாக நடைபெற்ற இந் நிகழ்வில் ஓய்வு பெற்ற வலயக் கல்விப் பணிப்பாளர் சி.மனோகரன், ஓய்வு பெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளர் க.வெற்றிவேல், ஓய்வு பெற்ற கோட்டக்கல்விப் பணிப்பாளர் வ.ஜயந்தன் ஆகியோர் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன்,

பாடசாலைகளை பிரதிநிதித்துவப்படுத்தி மருத்துவம், பொறியியல், சட்டம் ஆகிய துறைகளுக்கு பல்கலைக்கழகத்திற்கு தெரிவான மாணவர்களுக்கு புலமைப்பரிசில் வழங்கிவைக்கப்பட்டது.






































   

No comments: