வவுனியாவில் இருந்து பருத்தித்துறை நோக்கி சென்றுகொண்டிருந்த பேருந்துடன் யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு நோக்கி பயணித்த வேன் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இன்று ஞாயிற்றுக்கிழமை (23) இரவு, வவுனியா பன்றிக்கெய்தகுளம் பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ள நிலையில், படுகாயமடைந்த பலர் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறியமுடிகின்றது.
இதேவேளை, விபத்தை அடுத்து பஸ் வண்டிக்கு சிலர் தீ வைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. தீப்பற்றிய வாகனம் தீயணைப்பு படையினரால் அணைக்கப்பட்டு வரும் நிலையில் ஓமந்தை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.


No comments: