News Just In

2/24/2020 09:10:00 AM

ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத் தொடர் இன்று ஆரம்பம்


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43 ஆவது கூட்டத் தொடர் ஜெனீவாவில் இன்று (திங்கட்கிழமை) ஆரம்பமாகின்றது.

எதிர்வரும் மார்ச் மாதம் 20ஆம் திகதிவரை இடம்பெறவுள்ள இந்தக் கூட்டத்தொடரில், இலங்கை தொடர்பான, மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் அறிக்கை எதிர்வரும் 27ஆம் திகதி மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டு, உறுப்பு நாடுகளினால் விவாதிக்கப்படவுள்ளது.

இந்நிலையில், எதிர்வரும் 26ஆம் திகதி வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றவுள்ளார்.

ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில், இலங்கை தொடர்பாக நிறைவேற்றப்பட்ட 30 இன் கீழ் ஒன்று தீர்மானத்திற்கு வழங்கப்பட்ட இணை அனுசரணையை விலக்கிக்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதனையடுத்து அமைச்சரவையில் அதற்கான அனுமதியும் பெறப்பட்ட நிலையில், இந்த தீர்மானத்தை ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் உரையாற்றும்போது, வெளிவிவகார அமைச்சர் தினேஸ் குணவர்தன அறிவிக்கவுள்ளார்.

இதன் காரணமாக இம்­முறைக் கூட்டத் தொடர் மிகவும் முக்­கி­யத்­துவம் வாய்ந்­த­தாக கருதப்படுகிறது.

இம்­முறைக் கூட்டத் தொடரில் அர­சாங்க தூதுக்­கு­ழு­வினர், தமிழ் மக்­களின் பிர­தி­நி­திகள், பாதிக்­கப்­பட்ட மக்­களின் பிர­தி­நிதிகள் என பல்­வேறு தரப்­பினர் பங்­கேற்­க­வுள்­ளனர்.

No comments: